கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் போலீசார் தடிக்கல் போருந்து நிறுத்தம் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் நின்ற முதியவரின் பையை சோதனை செய்ததில் அதில் மூன்று கஞ்சா செடிகள் வைத்திருப்பது தெரியவந்தது. இதைஅடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் கெலமங்கலம் அருகேயுள்ள திப்பனூர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (60) என்பது தெரிய வந்தது. இதைஅடுத்து முதியவரை போலீசார் கைது செய்தனர்.