கெலமங்கலம்: நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதி உயிரிழப்பு

கெலமங்கலம் அருகேயுள்ள சின்னட்டி பகுதியை சேர்ந்த 50 வயதான தொழிலாளி சீனிவாஸ், கணேசா காலனி அருகே நடந்து சென்றபோது, அந்த வழியாக வந்த டூவீலர் அவர் மீது மோதியதில் படுகாயமடைந்தார். அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில், வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி