கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஜீவா நகரைச் சேர்ந்த 60 வயதான பெயிண்டர் வெங்கடேஷ், ஆறு மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தில் இறந்த தனது மகனின் மரணத்தால் மனமுடைந்து, வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த கெலமங்கலம் போலீசார், முதியவரின் உடலை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.