கெலமங்கலம்: ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் 4 பேர் கைது.

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம், குந்துமாரனப்பள்ளியைச் சேர்ந்த குரு பிரசாத் என்பவர் கடந்த 7-ஆம் தேதி குத்திக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், கொடுக்கல் வாங்கல் பிரச்சனையே கொலைக்குக் காரணம் எனத் தெரியவந்தது. இதையடுத்து, குற்றவாளிகளான சுரேஷ் பாபு, நவீன், தேவராஜ், வெங்கடேஷ் ஆகிய 4 பேரை கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலைப் பகுதியில் பதுங்கியிருந்தபோது போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி