கெலமங்கலம்: தர்காவில் உண்டியலில் பணம் திருடிய 2 பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அண்ணா நகரைச் சேர்ந்தவர் சிக்கிரியா (35) இவர் அந்தப் பகுதியில் உள்ள பாபா தர்காவில் பொறுப்பாளராக உள்ளார். நேற்றுமுன்தினம் (டிசம்பர் 25) 2 பேர் தர்காவின் மேற்கூரை வழியாக உள்ளே புகுந்து அங்கிருந்த உண்டியலில் இருந்த 1,200 ரூபாயைத் திருடினர். அப்போது அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் அந்த இரண்டு பேரையும் பிடித்து கெலமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் பணம் திருடியவர்கள் பச்சப்பனட்டி அருகே உள்ள பிதிரெட்டியைச் சேர்ந்த சரவணன் (30), சக்தி (22) என தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி