தேன்கனிக்கோட்டை அருகே ஐ. டி. ஐ. மாணவி தூக்கிட்டு தற்கொலை

தேன்கனிக்கோட்டை அருகே கே. ஓசூர் கிராமத்தைச் சேர்ந்த மாதேஷின் 15 வயது மகள், ஐ.டி.ஐ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். ஒரு வாலிபரை காதலித்து வந்த மாணவியை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவி ஞாயிறு மாலை குளியலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தேன்கனிக்கோட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி