கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உப்பாரப்பள்ளியில் செயல்பட்டு வரும் தனியார் இரும்பு உற்பத்தி நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. இது குறித்து நிறுவன அதிகாரி வினோத்குமார் தளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.