கெலமங்கலம் அருகே விவசாயியை கொலை செய்த தந்தை மகன் கைது

கிருஷ்ணகிரி அருகே  சொத்துப் பிரச்சனை காரணமாக தந்தை மகனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த கோவிந்தப்பா என்பவரது 4 ஏக்கர் சொத்தைப் பிரிப்பதில் மகன்களுக்கு இடையே தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. வாரிசு சான்றிதழ் கேட்கச் சென்ற கோவிந்தசாமியை, சின்னசாமி மகன் ராஜசேகர் கத்தியால் குத்தியதில், கோவிந்தசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த காவல்துறையினர் உடலை மீட்டு, இது தொடர்பாக சின்னசாமி மற்றும் ராஜசேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி