கிருஷ்ணகிரி மவட்டம் தளி அடுத்துள்ள கும்ளாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜமீர் (29) டிரைவர். இவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். நேற்று முன்தினம் (அக்-2ல்) அவர் மோட்டாரில் இருந்த பிளக் வயரை கழற்ற முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது. இதில் அவர் படுகாயம் அடந்தார். அவரை மீட்டு பெங்களூரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற போது வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து தளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.