கிருஷ்ணகிரி: மின் கம்பங்களை உடைத்து சேதம்; இருவர் மீது வழக்குப்பதிவு

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் கணேசா காலனி பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரின் நிலத்தில், அவரது உறவினர்களான பாலாஜி மற்றும் வேணுகோபால் ஆகியோர் கடந்த 5-ஆம் தேதி இரவு பொக்லைன் இயந்திரம் மூலம் இரண்டு மின் கம்பங்களை உடைத்து சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. நிலப் பிரச்சனை காரணமாக இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து சுரேஷ்குமார் அளித்த புகாரின் பேரில் கெலமங்கலம் போலீசார் பாலாஜி மற்றும் வேணுகோபால் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி