அஞ்செட்டி அருகே கார் - அரசு பஸ் மோதல்

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லிருந்து ஓசூர் நோக்கி நேற்று முன்தினம் மாலை சென்ற அரசு பேருந்து, அஞ்செட்டி அருகே அட்டப்பள்ளம் பகுதியில் எதிரே வந்த காருடன் நேருக்கு நேர் மோதும் நிலை ஏற்பட்டது. பேருந்து ஓட்டுநரின் சமயோசித செயலால், பேருந்து சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் இறங்கியது. இதில் பேருந்தில் இருந்த ஒரு சில பயணிகள் லேசான காயமடைந்தனர். காரில் வந்தவர்கள் காயமின்றி தப்பினர். பயணிகளை மாற்று பேருந்தில் அனுப்பி வைத்தனர். அஞ்செட்டி போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி