கிருஷ்ணகிரி: போதைப் பொருள்; சுற்றி வளைத்த போலீஸ்

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி போலீசார் நாகமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்ற நபரை பிடித்து சோதனை செய்த போது அவரிடம் 200 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர் முத்தம்பட்டியை சேர்ந்த நவீன்குமார் (23) என தெரியவந்தது. இதை அடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி