கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே பேளாளம் பகுதியைச் சேர்ந்த விவசாயி பேளாளப்பாவின் மகள் உஷாராணி (19) காணாமல் போனார். இவர் தேன்கனிக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று வீட்டிலிருந்து வேலைக்குச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பாததால், அவரைப் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், பேளாளப்பா தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து உஷாராணியைத் தேடி வருகின்றனர்.