கிருஷ்ணகிரி மாவட்டம் பேரண்டப்பள்ளி அருகே மாரச்சந்திரம் பகுதியைச் சேர்ந்த ஹரிஷ், வானவில் நகரில் வசிக்கும் ஒரு பெண்ணை அடிக்கடி சந்தித்து வந்துள்ளார். நேற்று இரவு அந்தப் பெண் வீட்டிலிருந்து மாரச்சந்திரம் கிராமத்திற்கு வந்தபோது, அவரைப் பின்தொடர்ந்த மர்ம நபர்கள் வானவில் நகர் அருகே ஹரிஷை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ஹரிஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.