தளி அருகே 15 நாட்களில் பச்சிளம் ஆண் குழந்தை உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே டி. சூளகுண்டா கிராமத்தில் கிரிஷ்-சாந்தா தம்பதியினருக்கு 15 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. சம்பவத்தன்று தாய் சாந்தா குழந்தைக்கு பால் கொடுத்தபோது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக குழந்தையை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. இது குறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி