கல்லாவியில் பகலில் எரியும் தெருவிளக்குகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் கல்லாவி பஞ்சாயத்திற்கு உட்பட்ட அனைத்து தெருவிளக்குகளும் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து பகல் வேளையிலும் எரிந்து கொண்டே இருக்கின்றன. பொதுமக்கள் கல்லாவி பஞ்சாயத்து நிர்வாகிகளிடம் இதுகுறித்து முறையிட்டபோது மின்சாரத் துறையினரிடம் பலமுறை தகவல் சொல்லியும் கண்டுகொள்ளாமல் இருப்பதாக புலம்பி வருகிறார்கள். 

இதனை கல்லாவி மின்சாரத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் அலட்சியப்போக்கை கடைப்பிடித்து வருவது வேதனை அளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதனைச் சரிசெய்து பொது மக்களுக்கு மின் விநியோகம் செய்ய சமூக அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி