தர்மபுரி: 2 தரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் (VIDEO)

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொம்மிடி அருகே செம்மியானூர் பகுதியை சார்ந்த மாரியப்பன் மகன் பாபு குடும்பத்திற்கு சொந்தமான ஆதிதிராவிடர்கள் மட்டுமே பயன்பாட்டில் வைத்துக் கொள்ளக்கூடிய பஞ்சமி நிலத்தை சிலர் வைத்துக் கொண்டு தங்களை விரட்டுவதாகவும் இடத்தை மீட்டு தங்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்ற நிலையில் நிலத்தை பாபு தரப்பிற்கு ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் செந்தில் தலைமையில் கிராம நிர்வாக அலுவலகம், வருவாய் துறை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் பஞ்சமி நில இடம் உள்ள பகுதிக்கு இன்று சென்றனர். அப்போது நிலத்தை 50 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் பயன்பாட்டில் வைத்திருந்த கந்தசாமி மகன் சண்முகவேல், ரங்கசாமி மகன் ராமசாமி, ராஜன் மகள் செல்வி ஆகியோர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குறிப்பிட்ட கால அவகாசத்தில் நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்படும் என வட்டாட்சியர் கூறியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி