கிருஷ்ணகிரி அருகே, பள்ளி சிறுவர்கள் சிலர், அப்பகுதியில் வசிக்கும் பள்ளி மாணவியின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிறக்கம் செய்து, போலியான ஐடி மூலம் ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டியுள்ளனர். மேலும், வீடியோ காலில் ஆடையின்றி நிற்க வைத்து, அதனை வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோவைக் காட்டி மாணவியின் தந்தையிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளனர். மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசார் 3 சிறுவர்களைக் கைது செய்து சேலம் கூர்நோக்கு மையத்தில் அடைத்தனர்.