கிருஷ்ணகிரி: கே. ஆர். பி. அணையில் நீர்திறப்பு அதிகரிப்பு.

கிருஷ்ணகிரி கே. ஆர். பி. அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், தென்பெண்ணை ஆற்றின் கரையோர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு மூன்றாவது நாளாக நேற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஆற்றைக் கடக்கவோ, குளிக்கவோ, கால்நடைகளை ஆற்றில் இறக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். அணையின் நீர்மட்டம் 50 அடியாக உள்ளது.

தொடர்புடைய செய்தி