கிருஷ்ணகிரி: அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள மாவட்ட திட்ட அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று(அக்.4) காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில துணைத் தலைவர் கோவிந்தம்மாள் தலைமை தாங்கினார்.

இந்த போரட்டத்தில் 5 ஆண்டுகள் பணி முடித்த அங்கன்வாடி ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு உள்ளூர் பணியிட மாறுதல் வழங்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் 200-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி