கிருஷ்ணகிரியில்அரசு ஊழியர் சங்க அமைப்பு தின விழா.

கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 43வது அமைப்பு தினம் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி, மீன்வளத்துறை அலுவலகங்கள் முன்பு சங்கக் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட துணைத் தலைவர் ஜெகதாம்பிகா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். அரசு ஊழியர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு அமைப்பு தினத்தை உற்சாகமாக கொண்டாடினர்.

தொடர்புடைய செய்தி