கிருஷ்ணகிரி: விநாயகர் சிலைகள் கரைப்பு; 1500 போலீஸாா் பாதுகாப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 1,500க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பொது இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாட்டிற்குப் பிறகு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. கிருஷ்ணகிரி அணையில் 200க்கும் மேற்பட்ட சிலைகளும், ஒசூர் ராமநாயக்கன் ஏரியில் 780 சிலைகளும் மேளதாளங்களுடன் ஊர்வலமாகச் சென்று கரைக்கப்பட்டன. பாதுகாப்புப் பணிக்காக 1,500க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி