கிருஷ்ணகிரி கனிமவள பிரிவு சிறப்பு தாசில்தார் செந்தில்நாதன் மற்றும் அதிகாரிகள் நேற்று முன்தினம் காவேரிப்பட்டணம் அருகே பையூரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிலர் திருட்டுத்தனமாக மண் அள்ளி கொண்டிருந்தனர். அதிகாரிகளை கண்டதும் அவர்கள் தப்பி ஓடினர். அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், காவேரிப்பட்டணம் போலீசார் லாரியை பறிமுதல் செய்து, உரிமையாளர் மகேந்திரன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.