கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே துப்புகானப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் பிரியங்கா (27) இவர் ஓசூரில் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர், சம்வம் அன்று ஓசூர் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக நின்று இருந்தார். அப்போது, அங்கு வந்த வாலிபர் ஒருவர். பிரியங்காவிடம் கத்தி முனையில் செல்போனை பறிக்க முயன்றபோது அருகில் இருந்தவர்கள் அந்த வாலிபரை பிடித்து ஓசூர் டவுன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணையில் அவர் ஓசூர் பாரதிதாசன் நகரை சேர்ந்த நவீன்குமார் (20) என தெரியவந்தது. இதை அடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.