ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 49 வயது கூலித் தொழிலாளி அம்போடிபுடி தேவய்யா, மத்திகிரி ரோட்டரி கிளப் அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்து ஒசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.