ஓசூரில் மகளிர் சுய உதவிக்ககுழு வணிக சந்திப்பு.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மூக்கண்டப்பள்ளி தனியார் ஹோட்டல் கூட்டரங்கில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் தலைமையில் மகளிர் சுய உதவிக்குழு உற்பத்திப் பொருட்கள் வணிக சந்திப்பு நடைபெற்றது. தமிழ்நாடு வாழ்வாதார இயக்கம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த குழுக்களின் தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. சந்தை வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் நடைபெற்ற இந்த சந்திப்பில் ஓசூர் மேயர் சத்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி