கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கல்லுகுறுக்கி பகுதியை சேர்ந்த ராஜம்மா (50), மாரண்டப்பள்ளி பகுதியை சேர்ந்த ரேணுகா (28), கல்லுகுறுக்கியை சேர்ந்த லட்சுமியம்மா (45) ஆகிய மூவரும் திங்கள்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்றபோது, பின்னால் வந்த கண்டெய்னர் லாரி மோதியது. இதில் ராஜம்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரேணுகா, லட்சுமியம்மா காயமடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.