ஓசூர் அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தொரப்பள்ளி ராஜாபுரத்தைச் சேர்ந்த எல்லப்பா, தனது மனைவி ராணி (30) என்பவரிடம் கூறாமல் பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார். இதுகுறித்து ராணி கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மனமுடைந்த ராணி கடந்த 21-ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராணி உயிரிழந்தார். இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி