ஓசூர் டவுன் போலீசார் சந்திர சூடேஸ்வரர் கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன. விசாரணையில், அவர்கள் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரன் (23), சிவமணி (23), மற்றும் விக்னேஷ் (23) என்பதும், அவர்கள் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.