கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் சிப்காட் போலீசார் நடத்திய சோதனையில், தனியார் பேருந்தில் வந்த ஜெபராஜ் (21), நித்திஷ் (20) மற்றும் ஒரு சிறுவன் ஆகியோரிடம் இருந்து 870 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் கோவை சுந்தராபுரத்தைச் சேர்ந்தவர்கள். வடமாநில வாலிபரிடம் மாத்திரைகளை வாங்கி கோவையில் விற்பனை செய்ய முயன்றது விசாரணையில் தெரியவந்தது. மூவரையும் போலீசார் கைது செய்து மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.