கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே குண்டு குறுக்க கிராமத்தில், விஜய் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படம் சென்சார் சான்றிதழ் உள்ளிட்ட சில காரணங்களால் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. இந்தப் படம் தடைகளை நீக்கி விரைவில் வெளிவந்து வெற்றி பெற வேண்டும் என, கங்கை அம்மன், மாரியம்மன் கோவில்களில் த.வெ.க. இளைஞர் அணி சார்பில் நேற்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு 108 தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தப்பட்டது.