சூளகிரி: டூவீலர் மீது வேன் மோதி மாணவன் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த ஒட்டர்பாளையத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (17) சூளகிரி அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் நிலையில் நேற்று (டிச.24) சூளகிரியில் உள்ள ஒரு திருமண மண்டபம் பகுதி அருகே டூவீலரில் சென்றார். 

அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சந்தோஷ்குமார் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சூளகிரி போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி