ஓசூரில் புதிய டிராபிக் பூத்தை திறந்து வைத்த எஸ். பி.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தளி சாலையில் உள்ள ராமநாயக்கன் ஏரி பூங்கா அருகில் தனியார் நிறுவனம் சார்பில் புதிதாக அமைக்கப்பட்ட டிராபிக் பூத் இன்று திறக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. தங்கதுரை இந்த டிராபிக் பூத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஏ.டி.எஸ்.பி. சங்கர், ஆய்வாளர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி