கலவரப்பள்ளி அணையிலிருந்து ரசாயன நுரையுடன்செல்லும் ஆற்று நீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு கடந்த ஒரு வாரமாக வினாடிக்கு 700 கன அடி நீர்வரத்து உள்ளது. இருப்பினும், ஆற்றங்கரையோரம் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவுகள் ஆற்று நீரில் கலப்பதால் தென்பெண்ணை ஆற்றில் நுரை பொங்கி ரசாயன கழிவுகள் அதிக அளவில் செல்கிறது. இதனால், அணையின் மதகுகள் வழியாக திறந்து விடப்படும் நீரானது துர்நாற்றத்துடன் நுரைகள் பொங்கி காட்சியளிக்கிறது. இந்த நிலை விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி