ஓசூர் அருகே பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபருக்கு காப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் பேகேப்பள்ளி பகுதியை சேர்ந்த மாலா (32) என்பவர் எழில் நகர் முதல் கிராஸ் பகுதியில் நடந்து சென்றபோது, டூ வீலரில் வந்த இருவர் அவரது செல்போனை பறித்துச் சென்றனர். இது குறித்து சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் ஓசூர் முத்துராயன் ஜீபியை சேர்ந்த பரத் (19) மற்றும் தர்ஷன் (19) ஆகியோர் செல்போனை பறித்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து தர்ஷனை போலீசார் கைது செய்து, பரத்தை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி