கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை ராகவேந்திரா நகரை சேர்ந்தவர் சுதாகர் (45) தனியார் நிறுவன ஊழியர். சுதாகருக்கும். சேலம் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கும் நிச்சயம் செய்யப்பட்டு நாளை புதன்கிழமை திருமணம் நடக்க இருந்த நிலையில் நேற்று காலை சுதாகர் ராயக்கோட்டை ரெயில் நிலையம் அருகே தண்டவாளம்அருகே நடந்து சென்ற போது எதிர்பாராதவிதமாக ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஓசூர் ரெயில்வே போலீசார் சுதாகரின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.