ரதசப்தமி விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் எம்.ஜி. ரோடில் உள்ள மண்டபத்தில் விநாயகர், மரகதாம்பிகை சமேத சந்திரமௌலீஸ்வரர், பார்வதி தேவி சமேத நஞ்சுண்டேஸ்வரர், சீதாராமர் ஆகிய உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில் சாமிகளின் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, வழி முழுவதும் பொதுமக்கள் தேங்காய், பழம், பூக்கள் உள்ளிட்ட பூஜை பொருட்களை வழங்கி சாமி வழிபாடு செய்தனர்.