கிருஷ்ணகிரி: சாலை பணிகளை விரைவில் முடிக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலம் விரிசல் ஏற்பட்டதை விரைந்து முடிக்கவும், பாகலூர் நெடுஞ்சாலை பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநகரச் செயலாளர் நாகேஷ்பாபு தலைமை தாங்கினார். ஒசூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே, மேம்பாலம், சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி