ஒசூரில் கஞ்சா கடத்தியவருக்கு காப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி போலீசார் கொத்தஜீகூர் பிரிவு சாலை அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கர்நாடக மாநிலத்திலிருந்து பதிவு எண் இல்லாத டூ வீலரில் வந்த மூன்று பேரை தடுத்து நிறுத்தினர். அவர்களில் இருவர் தப்பி ஓடிய நிலையில், வாகனத்தை ஓட்டி வந்த தேன்கனிக்கோட்டை பைரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் (24) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி