கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பஸ்தியைச் சேர்ந்த 30 வயது தனியார் நிறுவன ஊழியர் கவுதமன், பத்தலப்பள்ளி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சரக்கு வேன் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஓசூர் அட்கோ போலீசார், உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.