சூளகிரி: தண்ணீர் தொட்டியில் மூதாட்டி சடலம்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகேயுள்ள ஏனுசோனையை சேர்ந்தவர் பத்மா (65) இவர் மனநலம் பாதிக்கப்பட்டு பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் குணம் ஆகவில்லை. இந்நிலையில் பத்மாவின் கணவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து பெங்களூருவில் 15 ஆண்டுகளாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. 

கடந்த 30-ஆம் தேதி அன்று பத்மா பி. கொத்தப்பள்ளி பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் சடலமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீசார் அங்கு சென்று மூதாட்டியின் உடலை மீட்டு மூதாட்டி தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டு தண்ணீரில் வீசப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி