சூளகிரி: விஜய் பிதற்றிக் கொண்டிருக்கிறார் - கே.பி. முனுசாமி

சூளகிரியில் அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் கேபி முனுசாமி கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திரு. விஜய் தன்னைத் தானே புகழ்ந்து கொண்டிருக்கிறார். அவருக்கு அரசியலில் உள்ள உயரம், மக்கள் செல்வாக்கு தெரியாமல், சில அறிவுஜீவிகளின் அறிவுரைகளை ஏற்றுக்கொண்டு பிதற்றிக் கொண்டிருக்கிறார். அவரைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை" என்று கூறினார்.

தொடர்புடைய செய்தி