கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பசுமைதாயகம் அமைப்பின் நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் அந்த அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி கலந்துகொண்டு உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாவட்டத்தில் அதிகளவில் கனிமவளங்கள் சுரண்டப்படுவதால் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அச்சுறுத்தல் இருப்பதாகவும், அரசு உடனடியாக அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். இதில் திரளானோர் கலந்துகொண்டனர்.