கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் சிப்காட் போலீசார் ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகப்படும்படி நின்றிருந்த ரகுநாத் (34) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். முன்னுக்குப் பின் முரணாகப் பேசிய அவரிடம் சோதனை செய்ததில், 900 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான ரகுநாத், கஞ்சா விற்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.