பேரிகை அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பேரிகை தேர் பேட்டையைச் சேர்ந்த முனிராஜ் (46) என்பவர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து ரூ. 1,200 மதிப்புள்ள 12 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி