கௌவரப்பள்ளி: இடதுபுற கால்வாயில் புனரமைப்பு பணிகள் தொடக்கம்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கௌவரப்பள்ளி அணையிலிருந்து வலது மற்றும் இடதுபுற கால்வாயின் பழுதடைந்த கட்ட அமைப்புகளை புனரமைப்பு செய்வதற்கான பணிகள், சுமார் 9 கோடியே 70 இலட்சம் ரூபாய் மதிப்பில் நீர்வளத்துறை சார்பில் இன்று தொடங்கின. ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய். பிரகாஷ் எம்எல்ஏ தலைமையில் பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி