ஓசூர்: பேருந்து பயணியிடம் செல்போன் திருடிய இரண்டு பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அரசு நகர பேருந்தில் பயணம் செய்தபோது தனியார் நிறுவன ஊழியர் சிவசங்கரின் செல்போனை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் பெங்களூருவைச் சேர்ந்த தங்கராஜ் மற்றும் செல்வா ஆகியோர் செல்போனை திருடியது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி