ஓசூர்: காரில் கடத்தி வந்த குட்கா பறிமுதல்.. 2 பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் போலீசார் ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்ட போது அதில் சுமார் 15 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா இருந்தது தெரிய வந்தது. பின்னர் காரில் வந்தவர்களிடம் விசாரணை செய்ததில் அவர்கள், தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே எட்டிகுட்டை பகுதியைச் சேர்ந்த டிரைவர் அருள் (25) சஞ்சீவபுரத்தைச் சேர்ந்த சீதாராமன் (22) ஆகியோர் என்பதும் இவர்கள் பெங்களூருவில் இருந்து குட்கா கடத்தி வரப்பட்டதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து குட்கா மற்றும் கார் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி