கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் திட்ட பராமரிப்பு குடிநீர் திட்டத்தின் கீழ் இயங்கும் ஓசூர், தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், ராயக்கோட்டை, சூலகிரி, இப்பகுதிகளில் 169 ஊராட்சி மற்றும் 1886 குடியிருப்புகள் உள்ளன. இதில் ராயக்கோட்டை மற்றும் மத்திகிரி அருகே புதிய சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. மேலும் காவேரி குடிநீர் குழாய் அமைக்கும் பணியும் நடைபெறுவதால் 17, 18, 19 ஆகிய தேதிகளில் ஓகேனக்கல் கூட்டு குடிநீர் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.