ஓசூர்: 9 வயது மகனை கொன்று தாய் தற்கொலை.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வந்த 40 வயது தொழில் அதிபருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரது மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு பரிசோதனை செய்ததில், தாய்க்கும் 9 வயது மகனுக்கும் எச்.ஐ.வி. பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மனமுடைந்த தாய், தனது மகனை தலையணையால் மூச்சுத்திணற வைத்து கொன்றுவிட்டு, பின்னர் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிப்காட் போலீசார் உடல்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி